Monday, January 16, 2012

உழவர் திருநாள்

உழவர் திருநாளை முன்னிட்டு எனக்கு மிகவும் பிடித்தமான இந்த பாடலை எனது பிள்ளைகள் மூலம் புதிய ராகத்தில் பாட வைத்துள்ளேன்.இதற்க்கு அவர்களே இசை அமைத்து உள்ளனர்.கீழ்கண்ட இந்த உரலியில் இந்த பாடலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இங்கே அழுத்தவும்


பாடல் வரிகள் இங்கே:

இப்பாடலை எழுதியவர் "திரை கவிச்செல்வம்" மருதகாசி.

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே- பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே-நாம்
சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே


ஏர் முனைக்கு ......



நெத்தி வேர்வை சிந்திணோமே முத்து முத்தாக-அது
நெல் மணியை விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டு கட்டாக -அடிச்சு
பதரு நீக்கி,குவிச்சு வைப்போம் மொட்டு மொட்டாக

ஏர் முனைக்கு ......


வளர்ந்துவிட்ட பருவப் பெண் போலுனக்கு வெட்கமா?
தலை வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா
இது வளர்த்து விட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா?
என் மனைக்கு வரக்காத்திருக்கும் நீ என் சொத்தம்மா.

ஏர் முனைக்கு ......


இனிய பொங்கல் வாழ்த்துக்கள்