சுஜாதா நினைவு தினத்துக்கு ஒரு சிறப்பு பாடலை உருவாக்கியது போல, மகளிர் தினத்துக்கும் ஒரு பாடலை உருவாக்கலாம் என்று எனது நண்பர் செல்வக்குமார் கூறினார். அதற்க்காக திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களிடம் ஒரு பாடலை எழுதச் சொல்வோம் என்றார். அதன்படியே இமெயிலில் அவருடைய மனதில் தோன்றும் ஏதோ ஒரு சந்தத்தில் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாடல் வரிகள் பெண்மையை ஒரு சக்தியாக வருணித்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதை சொல்வதற்குள் அன்று மாலையே திருமதி. தேனம்மை ஒரு கவிதையை அனுப்பி விட்டார். மற்ற வேலைகள் காரணமாக அன்று இரவு கவிதையை படிக்க நேரம் இல்லை. காலையில் கவிதையை படித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. பாடலின் அர்த்தம், நான் நினைத்ததுபோலவே இருந்தது. அதனால் பாடல் வரிகளை படித்த அடுத்த சில நிமிடங்களிலேயே டியுன் உருவாகிவிட்டது. பாடல் ரெக்கார்டிங் மதியம் துவங்கி மாலையே முடிந்துவிட்டது. நண்பர் செல்வக்குமாரிடம் போன் செய்து பாடல் ரெடி வந்து வாங்கிக் கொள் என்று சொன்னேன். பாடலைக் கேட்டு அவருக்கும், எழுதிய திருமதி. தேனம்மைக்கும் சந்தோஷம்.
இந்தப் பாடல் பெண்களின் அன்பையும், எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றலையும், சக்தியையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் உற்சாகமான ஒரு மெட்டில் இசையமைத்து இருக்கின்றேன்.
இந்தப் பாடலை இந்த மகளிர் தினத்தில் உலகப் பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன்.
பாடலை இங்கே க்ளிக் செய்து டவுன்லோடு பண்ணிக் கொள்ளுங்கள்
ரொம்ப நல்லா இருக்கு. பிண்ணனி இசையின் சத்தத்தைக் குறைத்து வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் புரிவது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteதவறானால் மன்னிக்கவும்.
Ok thanx for ur comments
ReplyDeleteஅட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவிஜய்
thanx vijay
ReplyDeleteExcellent Composition Sir. Iam Srinath a new visitor to ur blog.
ReplyDeleteluv
Srinath G
thanx srinath for ur comments
ReplyDelete