Viscom மாணவர்கள், துணை-இணை இயக்குனர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தமிழ் திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் கோடிகளில் பேசப்படும் வியாபாரம் காரணமாக கனவுகள் நனவாகாமல் அப்படியே இருக்கும். இனி அந்த நிலை மாறும். நிச்சயம் நமது சினிமா கனவுகள் பலிக்கும். காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம்.
”அவர்” - இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம். இந்தப் படத்தின் இசை முதல் காமிரா மற்றும் எடிட்டிங் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம். இதனால் என்ன பலன்? திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி தயாராக வைத்துக் கொண்டால், அதாவது ஸ்கிரிப்ட் ரெடி என்றால், கோடிகள் பற்றிய பிரமிப்பும் பயமும் இல்லாமல் ஒரு அழகான தெளிவான திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரிக்க முடியும். நாங்கள் அப்படித்தான் பார்த்துப் பார்த்து ”அவர்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பலருக்கும் தயக்கமும், பயமும் அதிகமாக இருக்கிறது. காரணம் அது பற்றிய முழுவிபரமும் நமக்கு கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ கிடைக்கவில்லை. ”அவர்” திரைப்படக் குழு கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது.
டிஜிட்டல் மியுசிக், டிஜிட்டல் காமிரா, டிஜிட்டல் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் புரொஜக்ஷன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் ”அவர்” திரைப்படக் குழு விபரங்களை சேகரித்து சோதித்து வைத்திருக்கிறது.
இதை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகின்றோம். இன்று எங்கள் கனவு நனவாகிக் கொண்டிருப்பது போல, உங்கள் கனவும் திரை வடிவம் பெற வேண்டுமல்லவா? அதற்க்காகவே நாங்கள் ஒரு கருத்தரங்கு நடத்துகின்றோம்.
நாங்கள் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இன்னும் பல திறமைசாலிகள் சினிமாவிற்குள் நுழைய வாயப்பு ஏற்படும். அதன் மூலம் தமிழ் சினிமா மேலும் சிறப்படையும் என்பது எங்கள் எண்ணம்.
எனவே ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழாவை ஸ்டுடியோக்களில் நடத்தாமல், உங்களை அழைத்து ஒரு கருத்தரங்கமாக நடத்துகிறோம். அனைவரும் வாருங்கள்! பங்கு பெறுங்கள்! டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தெளிவு பெறுங்கள்!
தலைப்பு
”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”
நாள் - நேரம்
மே 9, ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
விலாசம்
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.
வழி
வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.
தொலை பேசி
விவேக் நாராயண் - 9444166290
கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Showing posts with label அவர். Show all posts
Showing posts with label அவர். Show all posts
Monday, May 3, 2010
Friday, October 16, 2009
மேற்கத்திய இசையில் அப்பர், மாணிக்க வாசகர் மற்றும் குதம்பை சித்தர்
First of all I wish one and all a very happy Deepavali. In this blog I'm going to share my experience with a song composition from the movie 'AVAR'.இயக்குனர் செல்வக்குமார் எனக்கு ஒரு சேலஞ்சிங் சிச்சுவேஷனை கூறினார். நாயகனை நினைத்து நாயகி பாடும் இளைமை துள்ளலான பாட்டு. ஆனால் பாடல் முழுவதும் நாயனும், நாயகியும் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். அதாவது ஜாகிங் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதைக் கேட்டவுடனேயே மனதில் தோன்றிய டியுன், நெஞ்சத்ததை கிள்ளாதே ”பருவமே . . . புதிய பாடல் பாடு”. இளையராஜாவின் மாஸ்டர் கம்போசிஷன். தமிழ் சினிமாவில் அதற்குப் பின் ஜாகிங் செய்து கொண்டிருப்பது போல எந்தப் பாடலும் வந்ததில்லை என்று நினைக்கிறேன். எனவே அந்த டியுனின் ஞாபகமே எவருக்கும் வந்து விடக்கூடாது என்று புதிய கோணத்தில் யோசித்தேன்.
பல டியுன்களை யோசிக்கும் போது, சில வருடங்களுக்கு முன் நான் கம்போஸ் செய்த ஒரு டியுன் தற்செயலாக ஞாபகம் வந்தது. உடனே அதை ஒரு Backgroud Patternஆக வைத்துக் கொண்டு புதிதாக ஒரு டியுனை உருவாக்கினேன். கேட்டவுடன் இயக்குனருக்கும் பிடித்துவிட்டது. பாடல் வரிகளை எழுதும்போது தான் நாங்களே எதிர்பார்க்காத ஒரு அற்புதம் நடந்தது.
எல்லா பாடல்களுக்குமே இயக்குனர் செல்வக்குமார் “டம்மி லிரிக்ஸ்” எழுதுவார். இந்தப் பாடலுக்கும் அவர் அப்படி முயற்சி செய்தபோது, தற்செயலாக மாணிக்கவாசகரின் பாடல் வரிகளை நெட்டில் படித்தாராம். அந்தப் பாடல்களை அவர் எனக்கு காண்பித்தார். என்ன அதிசயம்? அந்த வரிகள் அப்படியே என்னுடைய டியுனில் அமர்ந்து கொண்டது.
முன்னம் அவனுடை நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடை ஆருர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே . . .
பிச்சியானாள்!
- மாணிக்க வாசகர்
We used the above lines as Charanam in this love song. It's an uncoventional tune, with no seperate Pallavis. So when we were looking for more such lines, Mr. Selvakkumar came with another beauty.
செங்கயற் கண் பனி ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆட
சித்தம் சிவனுடன் ஆட ஆட
ஆடப் பொற்சுண்ணம் . . .
இடித்தும் நாமே!
- அப்பர்
Suddenly few lines from 'Thiruvasagam' by Appar mentioned above, synchronised with the same meter of the tune. We were thrilled and looked for more such old songs. Selvakkumar continued his search in the Internet and came with the lines of Kudambi Chithar.
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி – குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி?
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி?
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி – குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி?
- குதம்பை சித்தர்.
What a beauty I composed a tune in pure western style. But for the song the lyrics are from legendery 'Appar', 'Manika Vachagar' and 'Kudambai Chithar'. The entire team was really thrilled and till now it is our favourite song from the 'AVAR'.
You must be wondering why I am writing this now. This morning I watched Deepavali special Pattimandram in Sun TV. At the end of the show, Solomon Papayya mentioned the lines of Manika Vachagar and explained the meaning of theose 1000 year old lines.
அதை கேட்கும்போது நான் நெகிழ்ந்து விட்டேன். என்னுடைய இசைக்கு மாணிக்க வாசகர், அப்பர், குதம்பை சித்தர் இவங்களோட வரிகள் பொருந்திப் போனதே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். இன்று அதே வரிகளை சாலமன் பாப்பையா அவர்கள் சன் டிவி பட்டி மன்றத்தில் உச்சரித்தபோது எனக்கு சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. சீக்கிரமே பாடல்கள் வெளியாகும். அப்போது “குதம்பாய்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை நீங்களும் நிச்சயம் நன்றாக இரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
Monday, October 5, 2009
ஐந்து ஸ்வரங்களில் லலிதம் . . . சுதர்ஸனம்
எனது நண்பர் செல்வக்குமார் ஒரு பிளாக் எழுதியிருந்தார். மிகவும் சுவாரசியமான பிளாக். மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டுமே வைத்து உருவான பாடல்களைப் பற்றிய பிளாக் அது. அதைப் படித்தவுடன் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் ஷேர் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் இந்த பிளாக்.The origin of Indian Music was from "Sama Vedha". சாமவேதம் ஐந்தே ஐந்து ஸ்வரங்களை மட்டுமே கொண்டது.
ரி..க..ரி..ஸ...நி...த
நி..த..நி..ஸ...ரி..க...ரி
நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கின்றேன். இயக்குனரும் என் நண்பருமான செல்வக்குமார் ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற இரு வார்த்தைகளைக் கொடுத்து இசையமைக்கச் சொன்னார். மேற்கத்திய பாணியில் அமைந்த அந்த பாடலில் இந்த வரிகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு Divine Feel வேண்டுமெனக் கேட்டார். எனக்கு உடனே மனதில் சாமவேதம் தான் தோன்றியது. எனவே அந்த இரு சாமவேதம் மெட்டிலேயே இசையமைத்தேன்.
விரைவில் ”அவர்” பாடல்கள் வெளியாகும். கேளுங்கள்.
Labels:
அவர்,
சாம வேதம்,
லலிதம் சுதர்ஸனம்
Subscribe to:
Posts (Atom)

