Monday, May 3, 2010

டிஜிட்டல் சினிமா பற்றிய கருத்தரங்கமும் - அவர் திரைப்படத் துவக்க விழாவும்


Viscom மாணவர்கள், துணை-இணை இயக்குனர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தமிழ் திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் கோடிகளில் பேசப்படும் வியாபாரம் காரணமாக கனவுகள் நனவாகாமல் அப்படியே இருக்கும். இனி அந்த நிலை மாறும். நிச்சயம் நமது சினிமா கனவுகள் பலிக்கும். காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம்.

”அவர்” - இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம். இந்தப் படத்தின் இசை முதல் காமிரா மற்றும் எடிட்டிங் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம். இதனால் என்ன பலன்? திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி தயாராக வைத்துக் கொண்டால், அதாவது ஸ்கிரிப்ட் ரெடி என்றால், கோடிகள் பற்றிய பிரமிப்பும் பயமும் இல்லாமல் ஒரு அழகான தெளிவான திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரிக்க முடியும். நாங்கள் அப்படித்தான் பார்த்துப் பார்த்து ”அவர்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பலருக்கும் தயக்கமும், பயமும் அதிகமாக இருக்கிறது. காரணம் அது பற்றிய முழுவிபரமும் நமக்கு கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ கிடைக்கவில்லை. ”அவர்” திரைப்படக் குழு கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது.

டிஜிட்டல் மியுசிக், டிஜிட்டல் காமிரா, டிஜிட்டல் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் புரொஜக்ஷன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் ”அவர்” திரைப்படக் குழு விபரங்களை சேகரித்து சோதித்து வைத்திருக்கிறது.

இதை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகின்றோம். இன்று எங்கள் கனவு நனவாகிக் கொண்டிருப்பது போல, உங்கள் கனவும் திரை வடிவம் பெற வேண்டுமல்லவா? அதற்க்காகவே நாங்கள் ஒரு கருத்தரங்கு நடத்துகின்றோம்.

நாங்கள் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இன்னும் பல திறமைசாலிகள் சினிமாவிற்குள் நுழைய வாயப்பு ஏற்படும். அதன் மூலம் தமிழ் சினிமா மேலும் சிறப்படையும் என்பது எங்கள் எண்ணம்.

எனவே ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழாவை ஸ்டுடியோக்களில் நடத்தாமல், உங்களை அழைத்து ஒரு கருத்தரங்கமாக நடத்துகிறோம். அனைவரும் வாருங்கள்! பங்கு பெறுங்கள்! டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தெளிவு பெறுங்கள்!

தலைப்பு
”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”

நாள் - நேரம்
மே 9, ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

விலாசம்
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.

வழி

வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

தொலை பேசி
விவேக் நாராயண் - 9444166290

கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

6 comments:

 1. விவேக் சார் வாழ்த்துக்கள் ! உங்கள் இசை முயற்சி நிச்சயம் வெற்றி பெரும். செல்வா சாருடன் இணைந்து இதுவரை கொடுத்த ஸ்பெஷல் சாங்க்ஸ் (சூப்பர் ஸ்டார்,மகளிர் தினம், குழந்தைகள்) எல்லாமே புது முயற்சி.
  இதுவே உங்கள் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவருடன் உங்கள் இசை வெற்றிப்பயணம் தொடங்க இறைவனை வேண்டுகிறேன். எங்க புல் (full) சப்போர்ட்டும் உங்களுக்குதான்

  ReplyDelete
 2. All the best for the inauguration. Hope this new beginning opens doors to success and prosperity.
  Uma

  ReplyDelete
 3. Sir, Magalir Dinam & Sujatha song was extradinary, even I saw the 'AVAR' trailer also sir its superb, in trailer i heard லலிதம் . . . சுதர்ஸனம் song its give me a thrilling experience sir. By, V.M.Shankar

  ReplyDelete
 4. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete