Sunday, October 4, 2009

அதிஷா அவர்களின் தவறான அவசர குற்றச்சாட்டு

இன்று athishaonline.comல் ஒரு சர்ச்சையை படித்தேன். அதிஷா அவர்கள் ஏ.ஆர்.இரகுமானின் ”ஜெய்ஹோ” பாடலும், எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும்” பாடலும் ஒரே டியுன் என்று எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் அது அட்டைக்காப்பி என்று சாடியுள்ளார்.

நான் திரு.அதிஷா அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் ”நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் தவறு”. நான் ஒரு இசை கலைஞன். அதனால் உங்களை விட என்னால் அந்த இரு பாடல்களையும் கம்பேர் செய்ய முடியும். நான் நிச்சயமாக சொல்கிறேன், இரண்டும் வெவ்வேறு டியுன்கள்.

அதிஷா அவர்களே நீங்கள் நல்ல இரசிகராக இருக்கலாம். ஆனால் இசையின் நுணுக்கம் என்பதும், இரசிப்புத் தன்மை என்பதும் வேறு வேறு. இசையின் நுணுக்கத்தை முழுவதும் அறியாமல் நீங்கள் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். இரகுமானின் ஜெய்ஹோ பாடலை தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றீர்கள்.

முதல் வரி தவிர மற்ற அனைத்தும் சம்பந்தமே இல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன. அது மட்டுமில்லாமல் Orchestration என்ற சமாச்சாரம் இருக்கிறது சார், அதை கவனியுங்க சார். இந்த மாதிரி அரை ஆவர்த்தனத்தை கொண்டு கம்பேர் செய்ய ஆரம்பித்தால் பாகவதர் காலத்திலிருந்து எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமானின் இன்றைய காலம் வரை எல்லா பாடல்களுமே ஏதாவது ஒரு பாடலைப்போல இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

எனவே அரை மெஷர், ஒரு மெஷரை வைத்துக் கொண்டு காப்பி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நான் இரண்டு பாடலுக்கும் நோட்ஸ் எழுதித்தருகிறேன். உங்களுக்குத் தெரிந்த இசைக்கலைஞரை வைத்து கம்பேர் செய்து கொள்ளுங்கள்.

பின்குறிப்பு
ஒரு இசையமைப்பாளன் என்ற முறையில், எனக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, இரகுமான் என்று எந்த வேறுபாடும் கிடையாது. அனைத்து இசையும் இரசிப்பவன். அதனால் நான் ஏ.ஆர்.இரகுமானுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் தவறை சுட்டிக்காட்ட இதை எழுதியுள்ளேன். அவ்வளவுதான்.

13 comments:

 1. விவேக் நாராயண்,
  இதே டாப்பிக்கில் நானும் எழுதியிருக்கின்றேன். அதில் இந்த பிளாகுக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கின்றேன். இதைப் போல இன்னும் நிறைய இசை தொடர்பான பிளாகுகளை எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 2. ஆதிஷாவின் பதிவுக்கு நல்ல விளக்கம் விவேக்...

  இசையைப் பற்றி நிறைய விஷயங்கள் எழுதலாமே.

  ReplyDelete
 3. நானும் இதைத்தான் சொல்ல முயன்றிருப்பேன்.
  ஆனால், அதிஷாவிற்கு நான் பின்னூட்டமிடுவதற்கு முன்னே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டேன்.

  சரியான பார்வை.

  ReplyDelete
 4. Hi Krishna Prabhu,
  Thanks for your comments.
  Soon you can expect lots of interesting things about music and about my first movie "AVAR"

  ReplyDelete
 5. Hi Agal Vilaku,
  Welcome to my page.
  Thanks for your comments.

  ReplyDelete
 6. முதல் வரிக்கான தொடக்கம் தவிர, பெரிதாக ஒன்றும் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல, எல்லாப் பாடல்களுமே ஏதாவது ஒரு பழைய பாடலை நினைவு படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எந்தத் தலைமுறையிலும், யாரும் விதிவிலக்கில்லை. இதற்காக தேவாவுடன் ரஹ்மானை ஒப்பிடுவது கொஞ்சம் அதிகம்தான் ;) தொடர்ந்த இசைப்பயணத்தில் இதுவும் ஒரு விருது என்பதாகவே எ.ஆர்.ரஹ்மான் இதை ஏற்றுக்கொண்டார் என்பதாகவே எனக்குப் படுகிறது. எம் எஸ் விஸ்வனாதனாகட்டும், இளையராஜாவாகட்டும், ரஹ்மானாகட்டும், எல்லோரும் தங்கள் வழியில், தங்கள் பாணியில் இசையை அழகு படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்; இன்னும் இருப்பார்கள். தேவையில்லாமல் இது போன்ற சர்ச்சைகளை வளர்ப்பது அநாகரீகமாகவே படுகிறது.

  -ப்ரியமுடன்
  சேரல்

  ReplyDelete
 7. சேரல்

  //விஸ்வநாதனாகட்டும், இளையராஜாவாகட்டும், ரஹ்மானாகட்டும், எல்லோரும் தங்கள் வழியில், தங்கள் பாணியில் இசையை அழகு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்;இருப்பார்கள்.
  //
  மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

  ReplyDelete